MARC காட்சி

Back
திருமெய்யம் சத்தியகிரிநாதப்பெருமாள் கோயில்
245 : _ _ |a திருமெய்யம் சத்தியகிரிநாதப்பெருமாள் கோயில் -
246 : _ _ |a திருமயம், சத்யசேத்திரம், சத்யகிரி, சத்யபுரம்
520 : _ _ |a கருடன் தன் தாயின் அடிமைத் தளையைத் தீர்க்க அமிர்தம் கொண்டுவர வேண்டிய நிலையேற்பட்டது. அதற்கு வேண்டிய மகாபலத்தையும் சக்தியையும் இவ்விடத்திலிருந்து தான் மஹாவிஷ்ணுவைக் குறித்துத் தவமிருந்து பெற்றான் என்பர். சுவேதத் தீவில் பகவானுடைய கோட்டை வாசற் காவல் பூண்ட தச்சகன் என்பவன் கோபங்கொண்ட துர்வாச முனிவரால் சபிக்கப்பட்டு உடனே பாம்பினுருவத்தையடைந்து பூமியில் பல இடங்களிலும் திரிந்து இறுதியில் இத்தலத்தை அடைந்த மாத்திரத்தில் பகவானின் அனுக்கிரகத்தால் முன்பு போலவே விஷ்ணு சிங்கார ரூபத்தையடைந்தான். இங்கு சந்திரனால் ஆராதிக்கப்பட்ட பிம்பம் ஸத்திய புஷ்கரணிக்கு தெற்கில் ததிவாமன மூர்த்தியாய் உள்ளது. இது முழுமையும் சந்திர காந்தக் கல்லினால் அமைக்கப்பட்டது. அதற்கு மேற்கில் திருமெய்ய மலைக்குத் தென்புறம் அடிவாரத்தில் மிக்க அழகுள்ளதாகவும், சயன மூர்த்தியாகவும் திகழ்பவர் ஆதிசேடனால் அமைக்கப்பட்டு ஆராதிக்கப்பட்டவராகும். மெய்யமலையின் உச்சியில் கருடனால் பிரதிட்டை செய்யப்பட்ட பிம்பம் உயர்ந்ததான ஒரு கருடப் பச்சைக் கல்லினால் அமைக்கப்பட்டதாகும். ஆதிசேடன் தனக்கு வேதங்களில் கூறப்பட்டுள்ள சர்வஞானமும் தெரியவேண்டுமெனப் பிரார்த்தித்த தலம், எனவே இச்சேத்ரம் அஞ்ஞான இருள் நீக்கி மோட்சம் தரத்தக்கதாகும். தற்போதுள்ள ஆலய அமைப்பு பல்லவ மன்னர்களின் குடவரைக்கல் கோவில்கள் என்பதின் அடிப்படையில் வருவதாகும். பல்லவ மன்னன் இரண்டாம் நரசிம்மவர்மனால் (இப்போதுள்ளவாறு) கட்டப்பட்டதாகும். இங்கு ஆதிசேடனில் சயனித்துள்ள பெருமாள் ஸ்ரீரங்கநாதனைவிட மிகவும் நீளமானவர். இதற்கு அருகில் உள்ள சுவற்றில் பிரம்மன் முதலிய சகல தேவர்களும் எழுந்தருளியுள்ளனர். ஆதிசேடன் இத்தலத்தைப் பாதுகாப்பதாக ஐதீகம். இவன் பாதுகாப்பிலிருந்த பெருமானை ஒரு முறை அசுரர்கள் திருட்டுத்தனமாய் தூக்க வந்ததாயும் ஆதிசேடன் விஷக் காற்றை விட்டு அந்த அசுரர்களை அழித்ததாகவும் வரலாறு. இந்நிகழ்ச்சியை நினைவு கூறும் முகத்தான் இங்குள்ள ஆதிசேடன் வாயிலிருந்து விஷ ஜுவாலைகள் செல்வது போன்று செதுக்கப்பட்டிருப்பது ஒரு தனிச் சிறப்பாகும். திருமங்கையாழ்வாரால் மட்டும் பாசுரங்களில் மங்களாசாசனம் செய்யப்பட்டதாகும். மெய்யமென்னும் தடவரை மேல் கிடந்தானையென்றும், திருமெய்யத்து இன்னமுத வெள்ளத்தை என்றும், திருமெய்ய மலையாளா என்றும், மெய்யம் அமர்ந்த பெருமாளை என்றும், மெய்யமணாளர் என்றும் இப்பெருமாளைச் சொல்லிச் சொல்லி மகிழ்வார் திருமங்கையாழ்வார்.
653 : _ _ |a கோயில், வைணவம், திவ்யதேசம், மங்களாசாசனம், 108 திருப்பதி, வைணவத்தலம், முற்காலப் பாண்டியர், குடைவரை, குடவரை, திருமயம், திருமெய்யம், சத்தியகிரிநாதர் பெருமாள் கோயில்
700 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
710 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
905 : _ _ |a கி.பி.8-ஆம் நூற்றாண்டு / பாண்டியர்
909 : _ _ |a 2
910 : _ _ |a 108- திவ்ய தேசங்களில் ஒன்று. திருமங்கையாழ்வாரால் பாடப்பட்ட தலம். குடைவரைக் கோயில்.
914 : _ _ |a 10.247
915 : _ _ |a 78.7518
916 : _ _ |a ஸத்யகிரி நாதன்
917 : _ _ |a மெய்யப்பன், இராஜகோபாலன்
918 : _ _ |a உஜ்ஜீவனத் தாயார், உய்யவந்த நாச்சியார்
922 : _ _ |a அரச மரம் (அஸ்வத்தம்)
923 : _ _ |a கதம்ப புஷ்கரணி, ஸத்ய தீர்த்தம்
925 : _ _ |a இரு கால பூசை
929 : _ _ |a நீண்ட பிரமாண்டமான கிடந்த திருக்கோலம். சுவரில் பிரம்மன், முனிவர்கள், கருடாழ்வார் நின்ற கோலம். விஸ்வக்ஸேனர், ஸ்ரீராமர், ஆஞ்சநேயர், ஆழ்வார்கள், ஆண்டாள், சக்ரத்தாழ்வார், இலட்சுமி நரசிம்மர், ஸ்ரீகிருஷ்ணர் ஆகிய தெய்வ திருவுருவங்கள் தனித்தனி சன்னிதிகளில் விளங்குகின்றனர்.
930 : _ _ |a பிரம்மாண்ட புராணம் இத்தலத்தைப் பற்றி மிகவும் விவரித்துப் பேசுகிறது. இதில் நாரதருக்கும் சிவபெருமானுக்கும் நடந்த ஸம்பாஷணையாக 10 அத்தியாயங்களில் இத்தலத்தின் வரலாறு பேசப்படுகிறது. சத்தியகிரியென்றும், சத்திய சேத்ரமென்றும் புராணம் புகழக்கூடிய இத்தலத்தில் ஆதிசேடன், சந்திரன், சத்திய மகாமுனி போன்றோர் தவமிருந்து நற்பெயர் பெற்றுள்ளனர். ஒரு காலத்தில் மதுரையை ஆண்டபுருரவச் சக்ரவர்த்தியும் இங்குவந்தே மோட்சம் எய்தினார். தன்னிடம் தீய குணங்களே மிகுந்திருப்பதால் தனக்கு ஸத்வ குணம் வேண்டுமென்று ஆதிசேடன் எம்பெருமானை ஒரு நாள் வேண்டினான். அவ்வாறாயின் என்னைக் குறித்துக் கடுந்தவஞ்செய்து நீ அந்த வரத்தைப் பெற்றுக்கொள் என்று பெருமாள் உரைத்ததும் ஆயிரம் தலைகளுடனும் பல மைல் நீளமுடையதுமான தனது உடம்பை 5 தலைகளுடனும், ஒரு பாக நீளத்தால் அளவிடத்தக்கப் பருமனுடனும், ஒரு பனை மரத்தின் அளவிற்கு நீண்ட சரீரத்தையும் எடுத்துக் கொண்டு பூமிக்குள்ளாகவே துளைத்துக் கொண்டு வந்து இவ்விடம் வெளிப்பட்டான். ஆதிசேடன் வந்த மார்க்கம் பள்ளமானபடியால் அது ஸர்ப்ப நதியாயிற்று (பாம்பாறு) அவன் வெளிப்பட்ட இடம் சத்திய சேத்ரமாயிற்று. இங்கிருந்த சத்தியகிரிக்கு அருகில் உள்ள சத்திய புஷ்கரணியில் நீராடி எம்பெருமானைக் குறித்து கடுந்தவஞ் செய்யலானான் ஆதிசேடன். தவத்தை மெச்சிய மஹாவிஷ்ணு ஹயக்ரீவ வடிவத்தில் (குதிரைமுகம் கொண்ட வித்தைகட்கு தேவதையான அவதாரம்) தோன்றினார். உடனே ஆதிசேடன் தனது உடலால் ஆசனமும் செய்து, 5 தலைகளால் பாத்தியம், அர்க்கியம், ஆசமனீயம் முதலியன கொடுத்து தன் சிரங்களாகிய புஷ்பங்களால் பூஜித்து, வாசம் மிகுந்த வாய்க்காற்றினால் தூபம் கொடுத்து, தன் சிரத்தில் உள்ள ரத்தினங்களால் தீபாராதனை செய்து நாக்குகளால் ஆலவட்டம் வீசி, படங்களால் குடைபிடித்து மானசீகமாக அன்ன நிவேதனம் செய்து ஆராதித்தான். இதனால் மிக மகிழ்ந்த மகாவிஷ்ணு ஆதிசேடனுக்கு ஸத்வகுணத்தை அளித்து, அவனது கோர குணத்தை மாற்றியது மட்டுமன்றி இன்னும் வேறு என்ன வரம் வேண்டுமென்று கேட்டார். அதற்கு ஆதிசேடன் திருப்பாற்கடலில் என் மீது சயனித்துள்ளவாறு இங்கும் சயனித்துக் காட்சியருள வேண்டுமென்று கேட்க, அவ்வண்ணமே ஆகட்டும் என்றார். பின்னர் அர்ச்சாரூபமாய் மாறிய பின்னர் இருவரும் திருப்பாற்கடலெய்தினர். அத்திரி என்ற முனிவரின் கற்புடை மனைவி அனுசூயை என்பவள் மும்மூர்த்திகளே தமக்குப் புத்திரர்களாக வாய்க்க வேண்டுமென கடுந்தவமியற்றினாள். அதன் பயனாக மஹாவிஷ்ணு அம்சமாக தத்தாத்திரேயர் என்ற தவநிதியாகவும், கோபாம்சக் குணம் கொண்ட ருத்ரன் அம்சமாக துர்வாசர் என்ற கோபம் மிகுந்த முனிவராயும், பிரம்மாவின் அம்சமாக சந்திரனும் வந்து பிறந்தனர். தக்க பருவம் அடைந்ததும் அத்திரி முனிவர் மூவரையும் அழைத்து மந்திர உபதேசம் செய்து தவஞ்செய்ய அனுப்பினார். துர்வாசர் கைலாய மலையினையும், தத்தாத்திரேயர் இமயமலையினையும், சந்திரன் ஸத்திய கிரியையும் அடைந்தனர். பிரம்மனுக்கு திருமாலைக் குறித்து தவம் செய்வதே எப்போதும் பொழுது போக்கான விஷயம். எனவே பிரம்மனின் அம்சமாக வந்த சந்திரன் இச்சத்திய கிரியை அடைந்து திருமாலைக் குறித்துக் கடுந்தவம் செய்யலானான். திருமால் வாமன வடிவில் சந்திரனுக்கு காட்சி தந்து என்ன வரம் வேண்டுமென்று வினவினார். இத்தலத்தில் எனக்கு காட்சி கொடுத்த மாதிரியே சந்திர மண்டலத்திலும் தாங்கள் எழுந்தருளி நித்திய வாசம் செய்யவேண்டுமென சந்திரன் வேண்டவே ராஜ ஹம்ஸம் வெண் தாமரையில் வசிப்பதுபோல் திருமால் அங்கு எழுந்தருளி நித்திய வாசம் செய்யலானார். இமயத்தின் வடபுரத் தாழ்வரையில் புஷ்ப பத்திரை என்னும் நதியோடுகிறது. அதன் கரையில் சித்ரசிலை என்ற பாறை இருக்கிறது. அந்தப் பாறையினருகில் பத்ரவடம் என்ற ஒரு ஆலமரம் இருந்தது. அதனடியில் ஸத்திய தவர் என்னும் முனிவர் தவமியற்றினார். இவர் மகா தபசி. இவரது தவத்தை மெச்சி காட்சி கொடுத்த எம்பெருமான் என்ன வரம் வேண்டுமென்று கேட்க அதற்கு ஸத்தியத்தவர் எனக்கு வரம் எதுவும் வேண்டாம். ஆயின் நான் நினைக்கும் போதெல்லாம் தாங்கள் எழுந்தருள வேண்டும் என்றார். மகாவிஷ்ணுவும் சரி என்று ஒப்புக்கொண்டார். பின்னர் அம்முனிவரைப் பார்த்து இவ்விடத்தில் (இமயச்சாரலில்)பின்னொரு யுகத்தில் யாம் இன்னொரு திருவிளையாடல் புரிய சித்தமாயுள்ளோம். ஆகவே நீங்கள் தவம் செய்ததற்கு பிறிதொரு இடத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளும். உம் விருப்பப்படி நீங்கள் நினைத்த மாத்திரத்தில் வரக்கடவோம் என்றார் மஹாவிஷ்ணு. இதைச் செவிமடுத்து மிகவும் சந்தோஷித்த ஸத்தியதவர் திருமாலை நோக்கி அவ்வாறாயின் யான் தவம் செய்தற்குத் தகுந்த இடத்தை தாங்களே திருவாய் மலர்ந்தருளும்படி வேண்டினார். உடனே மஹாவிஷ்ணு சந்திரனும், அனந்தனும் தன்னைக் குறித்து தவமிருந்த இந்தச் சேத்திரத்தில் (சத்திய ஷேத்திரத்தில்) சென்று தவமியற்ற அருளினார். தமக்கு கிடைத்த பெரும் பேற்றை எண்ணிய ஸத்தியதவர் மீண்டும் மஹாவிஷ்ணுவை நோக்கி அவ்வாறாயின் இவ்வளவு காலம் என்னோடு ஒன்றிப் போய்விட்ட புஷ்ப பத்திரா என்னும் நதி, சித்திரசிலை என்னும் பாறை, பத்ரவடம் என்னும் ஆலமரம், என்னும் இம்மூன்றும் எனக்குத் தாய், தந்தை, தோழன், போன்றன. எனவே இவைகளை விட்டுப் பிரிவதும் மிகவும் கஷ்டமாயுள்ளது என்றார். உடனே மஹாவிஷ்ணு அவரின் நன்றியறிதலை மெச்சி அவ்வாறாயின் இந்த மூன்றையும் அந்தச் சேத்திரத்திற்கே அனுப்பி வைக்கிறேன் என்று சொல்லி ஐராவதத்திற்கு உத்தரவிட அம்மூன்றும் இங்கு வந்து சேர்ந்தன. புஷ்பத்திரா நதி புஷ்கரணியாயிற்று. சித்திர சிலை என்னும் பாறையே தற்போதுள்ள மெய்ய மலையாயிற்று. பத்ரவடம் என்னும் ஆலமரமே தற்போது அரசமரமாகக் காட்சியளிக்கிறது. இந்த ஆலமரம், கிரேதாயுகத்தில் பத்ரவடமாகவும் திரேதாயுகத்தில் அஸ்வத்தமாகவும் துவாபரயுகத்தில் புத்திரதீபமாகவும் கலியுகத்தில் பநஸ என்ற பெயரில் அரச மரமாகவும் திகழ்கிறது. ஸத்திய முனிவரும் இங்கு வந்து கடுந்தவஞ் செய்ய, ஓர் நாள் வைகாசி சுக்ல பட்சம், பஞ்சமி ஞாயிறன்று சிம்ம லக்கினத்தில் எம்பெருமானை நினைக்க உடனே பிரத்யட்சமாகி யாது வேண்டுமென்று கேட்க ஸத்திய முனிவர் மோட்சம் வேண்டுமென்றார். அதற்கு திருமால் ஸத்திய முனிவரை நோக்கி இன்னும் கொஞ்சகாலம் இங்கேயே தவம் புரிந்து கொண்டிருக்குமாறும் புருரவச் சக்கரவர்த்தி இவ்விடம் வந்து சேர்ந்தவுடன் இருவருக்கும் மோட்சம் அளிப்பதாகவும் கூறியருளினார். நவக்கிரகங்களில் ஒருவனான புதனின் மைந்தன் புருரவச் சக்கரவர்த்தி, இக்காலத்தில் இவன் மதுரையை தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்து வந்தான். இவன் விஷ்ணு பக்தியில் அளவற்ற ஈடுபாடும் பேராற்றலும் பெற்றவன். இவனுக்கு அருள்பாலிக்கும் பொருட்டு அடிக்கடி பிராட்டியால் வேண்டப்பட்ட எம்பெருமான் தன் பரிவாரங்களையெல்லாம் வராகங்களாக்கி தானும் வராக ரூபங்கொண்டு மதுரைக்கு எழுந்தருளினார். வைகைக்கு வடக்கு பக்கமாகவும், வெள்ளாற்றுக்கு தெற்கு பக்கமாகவும் உள்ள செழிப்பான பகுதியில் இந்த வராகங்கள் புகுந்து வயல்களை நாசம் செய்ய கிராம மக்களால் இவைகளை அடக்க முடியாமல் போக மதுரைக்கு மன்னனான புருரவச் சக்கரவர்த்தியிடம் முறையிட்டனர் (பிர்ம்மாண்ட புராணம் ஸ்லோகம் 217) மன்னன் தன் சேனைகளை அனுப்ப அவர்கள் தோற்றுப் போய்வர, இதைக்கண்டு திகைத்த மன்னன் தானே நேரில் யுத்தத்திற்கு சென்று வராகக் கூட்டங்களின் மீது சரமாரியாக அம்புகளை எய்து கொண்டிருக்கையில் தலைமை வராகம் மட்டும் (விஷ்ணு) புருரவச் சக்கரவர்த்தியின் முன்பு வந்து அவன் கைகளில் வைத்திருந்த வில்லையும் அம்பையும் பறித்துக் கொண்டு ஓட இவன் துரத்த இறுதியில் இந்த சத்தியகிரிவரை ஓடிவந்த அந்த வராகம் ஆலமரத்தடியில் தவம் செய்து கொண்டிருந்த ஸத்திய முனிவருக்கு முன்னால் ஒரு மனிதன் பேசுவது போல் இதோ புருரவன் வந்துவிட்டான், புருரவன் வந்துவிட்டான் என்று இரண்டு முறை சப்தமிட்டுவிட்டு மறைந்துவிட்டது. சப்தத்தைக் கேட்டு தவத்திலிருந்து கண்விழித்த ஸத்திய முனிவரும் புருரவச் சக்கரவர்த்தியும் யாரையும் காணாது திகைத்து நிற்க அவ்விருவருக்கும் சக்ரதாரியாக காட்சி தந்து சத்திய முனிவருக்கு மோட்சம் கொடுத்துவிட்டு, புருரவனை நோக்கி நீ இன்னும் 3 ஆண்டுகள் இங்கு தங்கியிருந்து இந்த ஆலயத்தை நல்லவிதத்தில் கட்டி முடித்து அதன்பின்பு என்னைச் சேர்வாயாக என்று அருளி மறைந்தார்.
932 : _ _ |a இக்கோயில் ஒரு குடைவரைக் கோயிலாகும். கி.பி. 8-ஆம் நூற்றாண்டில் இக்கோயில் அமைக்கப்பட்டது. இக்கோயிலின் குடைவரை அமைப்பு முற்காலப் பாண்டியர்களின் கட்டடக் கலையைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. பல்லவர்களின் குடைவரைக் கோயில் தாக்கம் இதில் இருப்பதாக அறிஞர்கள் கருதுகின்றனர். நீண்ட பிரமாண்டமான கிடந்த திருக்கோலம். சுவரில் பிரம்மன், முனிவர்கள், கருடாழ்வார் நின்ற கோலம். விஸ்வக்ஸேனர், ஸ்ரீராமர், ஆஞ்சநேயர், ஆழ்வார்கள், ஆண்டாள், சக்ரத்தாழ்வார், இலட்சுமி நரசிம்மர், ஸ்ரீகிருஷ்ணர் ஆகிய தெய்வ திருவுருவங்கள் தனித்தனி சன்னிதிகளில் விளங்குகின்றனர்.
933 : _ _ |a மத்தியத் தொல்லியல் துறை
934 : _ _ |a திருமெய்யம் கோட்டை, சத்தியகிரீசுவரர் குடைவரைக் கோயில், புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகம்
935 : _ _ |a புதுக்கோட்டையிலிருந்து 11 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இக்கோயில்.
936 : _ _ |a காலை 6.00 -12.30 முதல் மாலை 5.00-8.30 வரை
937 : _ _ |a திருமயம்
938 : _ _ |a புதுக்கோட்டை
939 : _ _ |a திருச்சி
940 : _ _ |a புதுக்கோட்டை நகர விடுதிகள்
995 : _ _ |a TVA_TEM_000151
barcode : TVA_TEM_000151
book category : வைணவம்
cover images TVA_TEM_000151/TVA_TEM_000151_திருமெய்யம்_சத்தியகிரிநாதப்பெருமாள்-கோயில்-0005.jpg :
Primary File :

TVA_TEM_000151/TVA_TEM_000151_திருமெய்யம்_சத்தியகிரிநாதப்பெருமாள்-கோயில்-0001.jpg

TVA_TEM_000151/TVA_TEM_000151_திருமெய்யம்_சத்தியகிரிநாதப்பெருமாள்-கோயில்-0002.jpg

TVA_TEM_000151/TVA_TEM_000151_திருமெய்யம்_சத்தியகிரிநாதப்பெருமாள்-கோயில்-0003.jpg

TVA_TEM_000151/TVA_TEM_000151_திருமெய்யம்_சத்தியகிரிநாதப்பெருமாள்-கோயில்-0004.jpg

TVA_TEM_000151/TVA_TEM_000151_திருமெய்யம்_சத்தியகிரிநாதப்பெருமாள்-கோயில்-0005.jpg

TVA_TEM_000151/TVA_TEM_000151_திருமெய்யம்_சத்தியகிரிநாதப்பெருமாள்-கோயில்-0006.jpg

TVA_TEM_000151/TVA_TEM_000151_திருமெய்யம்_சத்தியகிரிநாதப்பெருமாள்-கோயில்-0007.jpg

TVA_TEM_000151/TVA_TEM_000151_திருமெய்யம்_சத்தியகிரிநாதப்பெருமாள்-கோயில்-0008.jpg

cg102v103.mp4